திருப்பதி கோயில் திறப்பு: மொட்டையடித்தல் & திருமணங்களுக்கு அனுமதி உண்டா?

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (15:21 IST)
திருப்பதி தேவஸ்தான கோயிலில் பக்தர்கள் மொட்டையடிக்கவும் திருமணம் செய்துகொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 75 நாட்களுக்கு மேலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போதைய ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து ஜூன் எட்டாம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தளங்களையும் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் இன்று முதல் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கபப்ட்டுள்ளனர். ஒரு மணிநேரத்துக்கு 500 பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் திருப்பதி கோயிலில் முடி காணிக்கை செய்யவும், திருமணங்கள் செய்யவும் தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. திருமணங்களில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 11ஆம் தேதி முதல் ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் பொது தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்