5 நாட்களில் 50,000 பேர் பாதிப்பு –அதிர்ச்சி அளிக்கும் எண்ணிக்கை!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (15:15 IST)
இந்தியாவில் கடந்த 5 நாட்களில் மட்டும் 50,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இரண்டு மாதங்களுக்கு மேலாகக் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் பின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை தினசரி 10,000 ஐ நெருங்கி வருகிறது.

இந்நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 9983 ஆக கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,56,611 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1, 25,381 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1.24 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இந்தியா தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் ஸிரோ நோயாளியில் இருந்து 10,000 ஐ நெருங்க 74 நாட்கள் ஆனது. ஆனால் இப்போது ஐந்தே நாட்களில் 50,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் பீதியைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்