தனியார் உணவகங்கள் முற்றிலும் மூடல்; அனைவருக்கும் அன்னதானம்! – திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (09:47 IST)
திருப்பதியில் தனியார் உணவகங்கள், ஹோட்டல்களை முழுவதுமாக மூடிவிட்டு அனைவருக்கும் அன்னதானம் மூலமாக உணவு வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் திருப்பதி தேவஸ்தான நிதி ஒதுக்கீடு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் ரூ.3096.40 கோடியில் பட்ஜெட் திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு முன்பு இருந்ததை போன்று இலவச முன்பதிவற்ற இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி முழுவதும் உள்ள தனியார் உணகங்களை முற்றிலும் மூடிவிட்டு, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான திட்டம் மூலம் முழுமையாக உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்