பயனாளர்களின் விவரங்களை சீனாவிற்கு அனுப்புகிறது டிக் டாக்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (18:23 IST)
டிக்டாக் செயலி, பயனாளர்களின் விவரங்களை சேகரித்து அவற்றை சீனாவிற்கு அனுப்பி வருவதாக காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார்.

டிக் டாக் செயலி, தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த செயலிக்கு பல இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர், டிக் டாக் செயலி, பயனாளர்களின் விவரங்களை சேகரித்து அவற்றை சீனாவிற்கு அனுப்பி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர், பயனாளர்களின் விவரங்களை பாதுகாக்க முறையான டேட்டா பாதுகாப்பு கட்டமைப்புகள் இல்லாததே இதற்கு காரணம் எனவும், சமுக வலைத்தள பயன்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பயனாளர்களின் விவரங்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

சமீபத்தில் குழந்தைகளின் விவரங்களை அனுமதியின்றி சேகரித்ததாக, டிக் டாக் செயலி மீது அமெரிக்க அரசு 57 லட்சம் டாலர்கள் அபராதாம் விதித்ததாகவும், மேலும் சீனா டெலிகாம் உதவியுடன் டிக் டாக் செயலி பயனாளர்களின் விவரங்களை பரிமாற்றம் செய்வதாகவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு டிக் டாக் செயலியை சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. பின்பு கடும் நிபந்தனைகளுடன் மீண்டும் அறிமுகமான டிக்டாக் செயலி அதிக டவுன்லோடுகளை கடந்து தற்போது ப்ளே ஸ்டோர் முன்னணி இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்