150 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 3 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்..!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (08:05 IST)
மக்களவையில் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்ட 150 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று மக்களவையில் மூன்று சட்டங்கள்  நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால்  இந்த மசோதா பரிசீலனைக்க்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்க்கட்சி எம்பிக்கள் 150 பேர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த மசோதாவின் விவாதத்தின் போது பாஜக எம்பிகள் பேசிய நிலையில் விவாதம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டு மக்களவைகள் நிறைவேற்றப்பட்டன. மக்களவை நிறைவேற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898 மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் 1872 ஆகியவற்றிற்கு மாற்றாக அமையும் என தெரிகிறது.
 
மேலும் இந்த திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறவும், அதற்கு மாற்றாக அமல்படுத்தவும் வகை செய்யும் என கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்