நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத சஸ்பெண்ட்: இதுவரை 142 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!
செவ்வாய், 19 டிசம்பர் 2023 (13:11 IST)
நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத வகையில் இதுவரை 142 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
மக்களவையில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருவதை எடுத்து அமளி செய்த எம்பிக்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதுவரை மக்களவையில் 96 எம்பிக்கள் மற்றும் மாநிலங்கள் அவைகள் 46 எம்பிகள் என மொத்தம் 142 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் குறித்து இன்று இந்தியா கூட்டணி ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் அதிரடி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக 142 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.