பெண்ணிடம் திருட முயற்சி செய்த திருடன்.. பெண் சுதாரித்ததால் திருடனுக்கு படுகாயம்..

Mahendran
திங்கள், 3 ஜூன் 2024 (18:29 IST)
திருவனந்தபுரத்தில் பெண்ணிடம் ஸ்கூட்டரில் வந்த திருடன் திருட முயற்சி செய்தபோது அந்த பெண் சுதாரித்ததால் திருடனுக்கு படுகாயம் என்று தகவல் வெளியாகி உள்ளன.

திருவனந்தபுரம் அருகே பெண் ஒருவர் மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கிக் கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது ஸ்கூட்டரில் வந்த திருடன் அந்த பெண்ணின் தாலிச்செயினை பறிக்க முயன்றதாக தெரிகிறது.

இதனை அடுத்து சுதாரித்த அந்த பெண் திருடனின் சட்டை மற்றும் ஸ்கூட்டரை பிடித்ததால் இருவருமே நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில் பெண்ணிற்கு தலை, முகம் மற்றும் உடலில் சிறிய அளவில் காயம் ஏற்பட்ட நிலையில் திருடனுக்கு படுகாயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து தாலி செயினை பறிக்க முயன்ற திருடனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மடக்கி பிடித்து காவல் துறையினரிடம் ஒப்பாரித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரித்த போது பெண்ணின் பெயர் அஸ்வதி என்றும் திருடனின் பெயர் அனில்குமார் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தாலி செயினை பறிக்க முயன்ற திருடனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த திருடனை கைது செய்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அஸ்வதிக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்