என்னா வெயிலு..! திருட போன வீட்டில் ஏசி போட்டு தூங்கிய திருடன்!

Prasanth Karthick

திங்கள், 3 ஜூன் 2024 (12:20 IST)
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வீடு ஒன்றில் திருட சென்ற திருடன் ஏசியை போட்டு உறங்கி போலீஸிடம் மாட்டிக் கொண்ட சம்பவம் வைரலாகியுள்ளது.



கடந்த சில வாரங்களாக கோடைக்காலம் காரணமாக வெயில் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. வடமாநிலங்களான டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பலர் வெப்ப அலையில் சிக்கி உயிரிழந்து வரும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இந்நிலையில் வீடு ஒன்றில் திருட சென்ற திருடன் ஏசியை போட்டு நன்றாக தூங்கி போலீஸிடம் சிக்கிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டே. மருத்துவரான இவர் கடந்த வாரம் ஒரு வேலையாக வாரணாசிக்கு சென்றுள்ளார். வீடு பூட்டிக்கிடப்பத்தை அப்பகுதியில் சுற்றி திரிந்த கபில் என்ற திருடன் நோட்டமிட்டு வந்துள்ளான்.

பின்னர் நேற்று மது அருந்திவிட்டு இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கபில் பணம், நகை, மிக்ஸி, பாத்திரம் என எல்லாத்தையும் பேக் செய்துள்ளான். வெயிலின் தாக்கத்தாலும், சோர்வாகவும் இருந்த கபில் அங்கிருந்த ஏசியை போட்டுள்ளான். ஏசி கொடுத்த குளிர்காற்றில் தன்னை மறந்து அசந்து தூங்கியுள்ளான்.

மறுநாள் காலையில் பக்கத்துவீட்டுக்காரர் பார்த்தபோது மருத்துவரின் வீடு திறந்து கிடந்துள்ளது. உள்ளே எட்டி பார்த்தபோது திருடன் திருட்டு பொருட்கள் சூழ தூங்கிக் கொண்டிருந்துள்ளான். உடனடியாக இதுகுறித்து அவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீஸார் உறங்கிக் கொண்டிருந்த கபிலை தட்டி எழுப்பி கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்