தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடையில்லை..! உச்சநீதிமன்றம்...

Webdunia
வியாழன், 21 மார்ச் 2024 (17:23 IST)
புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
தேர்தல் ஆணையராக இருந்த அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் 2023-ம் படி தேர்தல் ஆணையரை நியமிக்க தடைக் கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாகூர் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
இந்த வழக்கில், இந்தியத் தலைமை நீதிபதி அல்லாமல், தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் குழு சுதந்திரமாகவே இரண்டு புதிய தேர்தல் ஆணையர்களின் நியமனத்தை மேற்கொண்டிருப்பதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்திருந்த நிலையில், புதிய தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ALSO READ: வைத்தியநாத சுவாமி கோவில் தேரோட்டம்..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!
 
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது. அதில், உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஒருநாள் முன்புத்தான், தேர்வுக் குழுவின் ஆலோசனைக் கூட்டமே நடைபெற்றது என்பதை மறுத்திருந்தது.
அடுத்த கட்டுரையில்