ரூபாய் நோட்டுக்களில் காந்தி படத்தை மாற்றும் திட்டம் இல்லை: ரிசர்வ் வங்கி

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (15:08 IST)
ரூபாய் நோட்டில் காந்தி புகைப்படத்திற்கு பதிலாக அப்துல் கலாம் உள்பட ஒரு சில தலைவர்களின் படங்கள் இடம் பெறப் போவதாக இன்று காலை செய்தி வெளியானது
 
 இந்த நிலையில் இந்த செய்திக்கு இந்திய ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மாற்றாக பிற தலைவர்களின் படம் இடம் பெறும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
 
எனவே தொடர்ந்து ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி உருவப்படம் மட்டுமே இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்