சோனியாவை மாயாவதி இன்று சந்திப்பது உண்மையா?

Webdunia
திங்கள், 20 மே 2019 (08:01 IST)
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும் இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சந்திக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
 
நேற்றுடன் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் வரும் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. அன்றைய தினம் மாலையே கிட்டத்தட்ட யார் அடுத்த ஆட்சியை அமைப்பது? என்பது கிட்டத்தட்ட தெரிந்துவிடும்
 
இந்த நிலையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கூட்டணிகளுக்கு மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் மாயாவதி அல்லது மம்தா பானர்ஜி தலைமையில் 3வது அணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் மாயாவதி சந்திக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி டெல்லியில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்போ இல்லை என்று அக்கட்சியின்  நிர்வாகி எஸ்.சி.மிஸ்ரா அறிவித்துள்ளார். எனவே இன்று எந்த சந்திப்பும் நடைபெறாது என்றே தெரிகிறது. தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே மாயாவதி-சோனியா சந்திப்பு நடைபெறும் என தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்