ஜெயேந்திரரின் சிலை எங்கு வைக்கப்படுகிறது தெரியுமா? சுப்பிரமணியன் சுவாமியின் சர்ச்சை தகவல்

Webdunia
திங்கள், 5 மார்ச் 2018 (09:13 IST)
சமீபத்தில் உடல்நலக்கோளாறு காரணமாக மறைந்த காஞ்சி சங்கர மடத்தின் 69வது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோவிலில் சிலை வைக்க வலியுறுத்துவேன் என பா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அயோத்தியில் ராமா் கோவில் புதிதாக கட்டப்படும் போது அங்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியின் சிலையை வைக்க வலியுறுத்துவேன். ராமஜென்ம பூமி விவகாரத்தில் அவருடைய பங்கை நினைவு கூறும் வகையில் அது அமையும்' என்று கூறியுள்ளார்

ராமர் கோவில் கட்டும் சர்ச்சையே இன்னும் முடிவடையாத நிலையில் அங்கு ஜெயேந்திர சுவாமிகளுக்கு சிலை வைக்க வலியுறுத்துவேன் என சுவாமி கூறியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்