ரஜினியிடம் இது இல்லாததால் அரசியல் செய்ய முடியாது: சுப்பிரமணியம் சுவாமி

சனி, 20 மே 2017 (04:01 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து தெரிவித்துவிட்ட நிலையில் சமீபத்தில் இதுகுறித்து பேசிய சுப்பிரமணியம் சுவாமி, 'ரஜினி ஒரு ஊழல் நடிகர் என்றும். அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் ரஜினிக்கு அரசியல் பற்றிய அறிவு கிடையாது என்றும் அவ்ருக்கு முதல்வராக தகுதி அவருக்கு இல்லை என்றும் கூறினார்



 


இந்த நிலையில் மீண்டும் நேற்று பெங்களூரில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ரஜினிக்கு பாஜக கட்சியில் இடம் கொடுக்கக் கூடாது. மேலும் அவரிடம் உறுதியான கருத்து கிடையாது. ஒரு நாள் ஒன்றை சொல்வார். அடுத்த நாள் அதை மாற்றிப் பேசுவார். ஒரு நாள் ஜெயலலிதாவை எதிர்த்து பேசுவார்.
மறுநாள் அவருக்கே ஆதரவை தெரிவிப்பார். ரஜினி இப்படி ஸ்திரமாக அரசியல் செய்ய முடியாததற்கு காரணம், அவருக்கு படிப்பறிவு கிடையாது என்பதுதான்.” என சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

கடந்த முறை ரஜினி ஊழல் நடிகர் என்றும் அரசியல் அறிவு கிடையாது என்றும் பேசிய சுவாமி இம்முரை படிப்பறிவு இல்லை என்று கூறியுள்ளதால் ரஜினி ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர். பிரதமர் மோடி எந்த பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றார் என்று பதில் சொல்லுமாறு டுவிட்டரில் ரஜினி ரசிகர்கள் எதிர்கேள்வி கேட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்