மும்பையில் தொழிலாளர்கள் போராட்டம்...கொரோனா தொற்று பரவும் அபாயம் !

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (17:57 IST)
இந்தியாவில் ஊரடங்கு வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை அமலில் உள்ளது. அதனால் மக்கள் அவரவர் வீடுகளில் உள்ளனர்.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கூலி வேலை செய்கின்றனர். இதில், கட்டிட தொழிலாளர்கள், விவசாயிகள், என எண்ணற்ற தொழில் செய்வோர் தினும் உண்பதற்கும் குடும்பத்தை சமாளிப்பதற்கும் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், தொழிலாளர்கள் பலரும் வேறு வேறு ஊர்கள் இருப்பதால், அவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு திருப்புவதில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. சிலர் பேருந்து வசதி  இல்லாத காரணத்தால் நூறு கி.மீ தூரம் நடந்துசெல்வதாக செய்திகள் வெளியானது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்குச் செல்லமால்,வேலையில்லாமல் கையில் காசும் இல்லாமல் பசியால் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மும்பையில்  உள்ள பந்த்ராவில் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள், உணவு  உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்கள் இல்லை எனக் கூறி தொழிலாளர்கள்  கூட்டம் கூட்டமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதனால், தொழிலாளர்களுக்கு கொரோனா  தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்