தமிழகத்தில் கொரொனா பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், வரும் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார். இன்று காலை பிரதமர் மோடி, வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
எனவே, தமிழகத்தில் ஏப்., 30 ஆம் தேதிக்கு பிறகு மதுக்கடைகள் எப்போது திறக்கப்படுமென்பது குறித்து அரசு அறிவிக்கும் என தெரிகிறது.