'கிரண்பேடி போலீஸ் வேலை பார்க்கிறார் '- முதல்வர் நாரயணசாமி பேச்சு

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (18:22 IST)
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த நாராயண சாமி முதலமைச்சராக பதவி வகிக்கிறார். அங்கு துணைநிலை ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும். ஓய்வு பெற்றவருமான கிரண்பேடி பதவி வகிக்கிறார். இவர்கள் இருவருமே அவ்வப்போது ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொள்வார்கள். அது ஊடகங்களுக்கு பெரும் தீனியாய் அமையும். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகளிலும் இருவரும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.
இந்நிலையில் புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஹெல்மட் அணிவது படிப்படியாக ஆனால் கட்டாயமாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து துணைநிலை ஆளுநர் அதிகாரிகளை மிரட்டி ஹெல்மேட் அணிய நடவடிக்கை எடுக்க கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் போலீஸ் காரர் வேலை பார்க்கிறார் என்று விமர்சித்தார். இது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்