பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் நடைபெற்று மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது என காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நள்ளிரவில் மோடி தலைமையிலான மத்திய அரசால்,நாட்டில் கள்ள நோட்டு, கருப்பு பணம் பதுக்கல்கள், தீவிரவாதிகளூக்கு நிதி உதவி செய்வதை தடுப்பதற்காக ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது (பணமதிப்பிழப்பு ) என அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து மூன்றாவது ஆண்டுகள் ஆகிவிட்டதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஊழியர்கள், , தலைநகர் டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு முன்பாக அமர்ந்து, கழுத்தில் பணத்தை மாலையாகப் போட்டுக் கொண்டு அரசுக்கு எதிராகக் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
மேலும், பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் நடைபெற்று மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது என காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.