இந்த விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பாஜக தரப்பில் இருந்து யாரும் என்னை வந்து அனுகவில்லை. திருவள்ளுவருக்கு காவி பூசியது போல எனக்கும் காவி பூச பார்க்கிறார்கள்; திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என பேசியிருந்தார்.
ரஜினியின் இந்த பேச்சுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ரஜினிகாந்த் ஆன்மீகவாதி; மதவாதி அல்ல. அதைத்தான் இன்றைய பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கிறார். ரஜினிகாந்தின் சிறந்த பேட்டிகளில் இது ஒன்று என புகழ்ந்து இருந்தார்.
இவர் மட்டுமின்றி, திமுக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோரும் ரஜினிகாந்த் கருத்தை வரவேற்று பாராட்டியுள்ளனர்.