பெண்ணைக் கொன்று சலடத்தை பிரீசரில் வைத்த நபர் கைது!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (20:34 IST)
டெல்லி யூனியனில் உள்ள மித்ராவன் கிராமத்தில் உள்ள ஒரு உணவு விடுதியில் இளம்பெண்ணில் சடலம் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள நஜாப்கார் நகர் மித்ராவன் கிராமத்தின் சாலை ஓரமாய் ஒரு ஓட்டல் இயங்கி வருகிறது.

இந்த ஓட்டலில் உள்ள பிரீசரில் ஒரு இளம்பெண்ணில் சடலம் மறைத்துவைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வெளியானது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, காவல் துணை ஆய்வாளர் விக்ரம் சிங் கூறியதாவது: ஓட்டல் உரிமையாளர் சாஹில் கெலாட்டை கைது  செய்திருக்கிறோம்.சாஹில், கொல்லப்பட்ட பெண்ணுடன் உறவில் இருந்துள்ளார். ஆனால்,  வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததால், அவரிடம் சென்று அப்பெண் கேட்டுள்ளார்.

இதில்,ஆத்திரமடைந்த சாஹல், அப்பெண்ணைக் கொன்று பிரீசரில் மறைத்து வைத்திருக்கிறார்.  இந்தக் கொலை நடந்து 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்