ஸ்பூன்ல சாப்பிடலாம் ஸ்பூனையே சாப்பிடலாமா

Webdunia
சனி, 25 மே 2019 (13:53 IST)
ஸ்பூன், கத்தி, ஸ்க்ரூ ட்ரைவர் போன்றவற்றை விழுங்கிவிட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆன ஒருவரால் சிம்லா பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

சிம்லாவின் மாண்டி பகுதியை சேர்ந்த ஒருவர் வயிற்றுவலியால் துடித்தப்படி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை டாக்டர்கள் கேள்வி கேட்டதற்கும் பதில் சொல்லாமல் வேதனையால் துடித்துள்ளார். இதனால் அவரை அட்மிட் செய்து அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர் வயிறு முழுவதும் ஸ்பூன், கத்தி போன்ற பொருட்கள் இருந்துள்ளன. உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் அவருடைய வயிற்றில் இருந்து 8 ஸ்பூன், 2 ப்ரஷ், 2 ஸ்க்ரூ ட்ரைவர், ஒரு கத்தி முதலிய பொருட்களை வெளியே எடுத்துள்ளனர். ஒரு மனிதன் தானாக இந்த பொருட்களை விழுங்கியிருக்க வாய்ப்பில்லை என கருதிய டாக்டர்கள் அவரை பற்றி விசாரித்தனர். விசாரணையில் அவர் மாண்டியா பகுதியை சேர்ந்தவர் என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்