50 ஆயிரம் லஞ்சம் கேட்ட நபரை செருப்பால் அடித்த பெண்

Webdunia
புதன், 8 மே 2019 (18:07 IST)
ஜார்கெண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிபோல்  நடித்த நபரை தனது நண்பர்கள் உதவியுடன்  கண்டுபிடித்த பெண் அந்த நபரை தனது செருப்பால் அடித்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போலி நபரை அடித்த பெண் இதுபற்றி கூறியதாவது :
 
பாலேந்திர மேத்தோ என்பவர் சில நாட்களுக்கு முன் பல பெண்களுடன் பல்வேறு இடங்களில் சோதனையிட வந்தார். அப்போது அவருடன் சில பெண்கள் பணியாற்றுகிறார்கள் என்று எண்ணினேன். எனக்குண்டான பிரச்சனையை தீர்த்துவைக்க அவரிடம் வலியுறுத்தினேன்.
 
ஆனால் அதற்கு என்னிடம் அவர் ரூ.50000 லஞ்சம் கேட்டார்.அதன் பிறகு எனக்கு அவர் மீது சந்தேகம் வந்தது. உடனே அந்த நபரைப் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் விசாரித்ததற்கு, சட்டப்படி நோட்டீஸ் அனுப்பாமல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் யாரும் சோதனையிட வரமாட்டார்கள் என்று தெரிவித்தார்.
 
இதனையடுத்து அந்த நபரிடம் என்னால் லஞ்சம் தரமுடியாது என்று கூறினேன். அதற்கு அவர் ரூ.50000 லஞ்சம் தரவில்லை என்றால் என்னைச் சிறையில் தள்ளிவிடுவதாக மிரட்டினார்.
 
பின்னர் அவரிடம் பணம் கொடுப்பதாய்க் கூறி தனிஇடத்திற்கு வரவழைத்தேன்.ஆனால் அதற்கு முன்னதாகவே போலீஸிடமும் நண்பர்களிடமும் இதுபற்றி தெரிவித்திருந்தேன். அந்த நண்பர் வந்ததும் அவரை மடக்கிப்பிடித்தேன் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்