ரஞ்சன் கோகாய் மிது புகார் தெரிவித்த பெண் - அடுத்து உள்ள வாய்ப்புக்கள் என்ன?

செவ்வாய், 7 மே 2019 (19:44 IST)
இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் முகாந்திரம் அற்றது எனக் கூறி அந்த புகாரை தள்ளுபடி செய்தது சிறப்பு விசாரணைக்குழு.
தன்னுடைய குற்றச்சாட்டுகள் எந்த அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டது என்று தன்னால் சொல்ல இயலவில்லை என புகார் தெரிவித்த பெண் தெரிவித்தார்.
 
இந்த அறிக்கை குறித்து சந்தேகம் உள்ளது. ஏனென்றால் இது ஒரு தரப்பை கொண்டே விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
 
இந்த புகாரின் விசாரணையில் புகார் தெரிவித்த பெண் பங்கேற்கவில்லை. இம்மாதிரி ஒருதரப்பை மட்டுமே விசாரித்து வழங்கப்படும் அறிக்கைக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லை.
 
இரண்டாவது புகார் தெரிவித்த பெண்ணுக்கு வழக்குரைஞரை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அது ஒரு அடிப்படை உரிமை.
 
இதைத்தவிர விசாரணைக் குழுவின் நீதிபதிகளை யார் தேர்வு செய்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து எந்த ஒரு தகவலும் இல்லை தீர்மானமும் இல்லை.
 
மேலும் மற்றொரு முக்கியமான விஷயம் ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணை மேற்கொண்ட அமர்வுக்கு அவர்தான் தலைமை தாங்கினார்.
 
அந்த நாளுக்கு பிறகு நடந்த அனைத்தும் சட்டவிரோதமானது. எனவே இந்த அறிக்கை முக்கியமானது என நான் கருதவில்லை.
 
இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் பொதுச் செயலர் இந்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாது என்று தெரிவித்தார்.
 
மேலும் அறிக்கையில் 2003ஆம் ஆண்டு இந்திரா ஜெய்சிங்கால் வாதாடப்பட்ட வழக்கு சுட்டிக்காட்டி அவ்வாறு தெரிவித்தார்.
 
இந்திரா ஜெய்சிங் Vs உச்சநீதிமன்ற 5 SCC 494 வழக்குப்படி, உள்விவகாரக் குழு அந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று எந்த ஒரு கட்டாயமும் இல்லை.
 
2003ஆம் ஆண்டு என்ன நடந்தது?
 
அதுவும் பாலியல் துன்புறுத்தல் குறித்த ஒரு விஷயம் தான். கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது
 
அந்த சமயத்தில் ஒரு பொது அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணைக்கு நானும் தகவல் தர சென்றிருந்தேன்.
 
அந்த அறிக்கை வந்ததும், அவர்மீது தரப்பட்ட புகார் தள்ளுபடி செய்யப்பட்டதாக எனக்கு தெரிந்தது. அதன்பின் உச்சநீதிமன்றத்துக்கு சென்று அந்த அறிக்கை வேண்டும் என நான் வாதாடினேன்
 
நான் மனு கொடுத்த பிறகு, அந்த அறிக்கை எனக்கு கொடுக்கப்படமாட்டாது என முடிவு செய்யப்பட்டது
 
ஆனால் அந்த சமயத்தில் தகவல் அறியும் சட்டம் அமலில் இல்லை. தற்போது அந்த சட்டம் வந்துவிட்டது மேலும் விதிகள் மாற்றப்பட்டுவிட்டது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பிலும் மாற்றங்கள் வேண்டும்
 
இந்த வழக்குக்கு அதே முடிவு பொருந்தாது என நான் நம்புகிறேன்.
 
தற்போது புகார் கொடுத்தவருக்கு விசாரணைக்குழுவின் அறிக்கை கொடுக்கப்படவில்லை. மேலும் அது அவருக்கு கிடைக்கும் என அவருக்கு தோன்றவில்லை.
 
இந்த சூழலில் புகார் கொடுத்தவருக்கு இருக்கும் வேறுசில வழிகள் என்ன என்பதை குறித்து யோசிப்பதே முக்கியம்
 
இப்போதும் புகார் கொடுத்தவருக்கு நிறைய வழிகள் உள்ளது. விசாரணைக்குழுவின் முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியும்.
 
இது ஒரு நிர்வாக அறிக்கை. எனவே இது குறித்து மேல்முறையீடு செய்ய முடியும்
 
புகார் தெரிவித்தவர் தனது அடுத்தக்கட்ட முடிவு குறித்து தீர்மானிக்க வேண்டும். புகார் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து மேல்முறையீடு செய்யமுடியும். அவர் குற்றவியல் புகார் ஒன்றையும் கொடுக்கலாம்
 
ஆனால் இந்த அறிக்கையை பெறாமல், அவருக்கு எந்த வழிகளும் இல்லை என்ற முடிவுக்கு வருவது சரியில்லை.
 
இந்த அறிக்கையை பெற அவர் நீதிமன்றத்துக்கு செல்ல முடியும். முடிவு என்னவாக இருந்தாலும், அவரின் முன் நிறைய வழிகள் உள்ளது.
 
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவதே இதற்கான ஒரே வழி என பல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
ஆனால் அது மட்டுமே ஒரே வழி இல்லை.
 
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டி அவர்கள் இவ்வாறு சொல்கின்றனர். மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் நீதிபதி மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்திருந்தபோது, நீதிபதிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
 
புகாருக்கு பிறகு, அந்த நீதிபதிக்கு எதிராக மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது
 
பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங்குடன் மேற்கொண்ட உரையாடலே இந்த கட்டுரை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்