ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் உள்ள ஆசியா விமானம் மீது ஒரு பறவை மோதியதில் பயணிகள் அனைவரும் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.,
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து நேற்று மாலை கேரள மாநிலம்
கோழிகோடிற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பெரும் விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்து. இதில் 2 விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், ஜார்கண் மாநிலம் ராஞ்சி நகரில் உள்ள ராஞ்சி விமான நிலையத்தில் ஏர் ஆசிய விமானம் (ஐ5-632) ஒன்று பயணிகளுடன் மும்பை செல்லத் தயாரானது.
அந்த விமானம் மேலெழும்போது பறவை ஒன்று மோதியுள்ளது. இதனால் விமானி கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளனர். விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகிறது.