வேலை தருவதற்கு ரூ.100 கோடி லஞ்சம்! TCS ஐ உலுக்கிய ஊழல்! – பணியாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

Webdunia
ஞாயிறு, 25 ஜூன் 2023 (10:19 IST)
பிரபல டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதற்காக பலரிடம் கோடிக் கணக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்தியாவில் பிரபலமான ஐடி நிறுவனங்களில் ஒன்றாக டாடா கன்சல்டன்சி செர்வீசஸ் எனப்படும் டிசிஎஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை பெற பலரும் விண்ணப்பித்து வரும் நிலையில் இந்த நிறுவனத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் சிலவற்றுடன் சேர்ந்து கொண்டு பணி வழங்க பணியாளர்களிடமே லட்சங்களில் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக டிசிஎஸ் நிர்வாகமே அமைத்த விசாரணை குழு மேற்கொண்ட விசாரணையில் அதிகாரிகளின் குட்டு அம்பலமாகியுள்ளது. சுமார் 3 லட்சம் பேருக்கு பணிகள் வழங்க ரூ.100 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள டிசிஎஸ் நிர்வாகம் 4 முக்கிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்