21 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய 8 ஆயிரம் கோடி செலவு செய்த மெட்டா!

சனி, 27 மே 2023 (17:39 IST)
பணி நீக்க நடவடிக்கைக்கு மெட்டா நிறுவனம் ரூ.8 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா. இந்த  நிறுவனம் சமீபத்தில் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 13 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டது.

அந்த நிறுவத்தின் பொருளாதார சரிவை ஈடுகட்டுவதற்கும், நிறுவன மறுகூட்டமைப்பு மேற்கொள்வதற்கும் இந்த  நடவடிக்கை எடுக்ககப்பட்டதாக நிறுவனம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, மெட்டா நிறுவனம் 21 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் மெட்டா நிறுவனம் 2023 காலாண்டு முடிவுகளை பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

இதில், பணி நீக்க நடவடிக்கைக்காக, அதாவது ஊழியர்களுக்காக பணி  நீக்க ஊதியம் மற்றும்  தனிப்பட்ட செலவினங்களுக்கு மட்டும் 1 பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரம் கோடி செலவாகும் என்று அதில் குறிப்பிடப்பட்டடுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்