இன்று இரவு கரையை கடக்கும் டவ்-தே! – முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (12:19 IST)
அரபிக்கடலில் வலுப்பெற்ற டவ் தே புயல் இன்று நள்ளிரவில் குஜராத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறியுள்ளது. டவ் தே என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் குஜராத்தின் போர்பந்தர் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் டவ் தே புயலால் பெய்து வரும் கனமழையால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று நள்ளிரவில் டவ் தே புயல் போர்பந்தர் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குஜராத் பகுதியில் கடற்கரை ஓரமாக வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும் புயல் பாதிப்புகளை தடுக்க பல்வேறு முன் நடவடிக்கைகளில் பேரிடர் மேலாண்மை குழு ஈடுபட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்