கரை கடக்கும் முன்னே உக்கிரம் காட்டும் டவ்-தே! – கோவாவில் பாதிப்பு!

ஞாயிறு, 16 மே 2021 (11:09 IST)
அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் நாளை மறுநாள் கரையை கடக்க உள்ள நிலையில் கோவாவில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலானது தற்போதைய நிலவரப்படி கோவாவின் பனாஜி நகரிலிருந்து 190 கி.மீட்டர் தென்மேற்கில் நிலை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தீவிர புயலாக வலுவடைந்துள்ள டவ்-தே தற்போது அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கோவா அருகே 190 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளதால் கோவாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடற்கரை பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படுவதுடன், பல்வேறு இடங்களில் மின்சார கம்பங்கள், மரங்களும் சாய்ந்துள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்