புதிய அணை கட்டும் முயற்சி: கேரள அரசுக்கு தமிழகம் எதிர்ப்பு!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (19:02 IST)
கேரளாவின் புதிய அணை கட்டும் முயற்சிக்கு தமிழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளதை அடுத்து அதனை ஏற்க முடியாது என தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டின் உரிமையை எந்த காரணத்தை கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் அவர் கூறி உள்ளார்
 
முன்னதாக கேரள சட்டசபையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என அம்மாநில ஆளுநர் தெரிவித்ததை அடுத்து துரைமுருகன் தனது அறிக்கையில் கேரள ஆளுநரின் அறிவிப்புக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசுடன் அரசிடம் கேரள அரசு திணிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்