ராணுவ ஆட்சியை விரும்பும் இந்தியர்கள்; ஆய்வில் தகவல்: காரணம் என்ன?

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2017 (21:37 IST)
இந்தியர்கள் ராணுவ ஆட்சி வேண்டும் என விரும்புவதாக வெளியாகியுள்ள ஆய்வின் தகவல் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றழைக்கப்படும் இந்தியாவில் இந்தியர்கள் ராணுவ ஆட்சி வேண்டும் என கோருவதாய வெளியாகியுள்ள தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்காவை சேர்ந்த பியூ என்ற நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.  
 
ஆய்வில் வெளியான முடிவுகள்:
 
# 85 சதவீத  இந்தியர்கள் அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளனர். 
 
# 27% இந்தியர்கள் தங்களுக்கு வலிமையான தலைவர் தேவை என்று கூறி உள்ளனர்.
 
# 53% பேர் ராணுவ ஆட்சியை விரும்புகின்றனர்.
 
# 65% தங்களை பல்துறை வல்லுநர்கள் ஆள வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்