சபரிமலை விவகாரம்: தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (15:08 IST)
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
 
சபரிமலையில் அனைத்துப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு  கிளம்பி போராட்டங்கள் நடந்தன. பெண்கள் பலர் சபரிமலைக்குள் சென்று சுவாமி தரிசனமும் செய்தனர். இதனால் அங்கு பெரிய கலவரமே வெடித்தது. இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் 51 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்நிலையில் இந்த வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சீராய்வு மனுக்கள் மீதான உச்சநீதிமன்ற விசாரணையில் தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்வதாகவும், சபரிமலையில் அனைத்து வயது  பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக விசாரணையின்போது தேவசம் போர்ட் தெரிவித்துள்ளது. மேலும் எந்த வழக்கமும்,  சம்பிரதாயமும் சம உரிமையை பறித்தால் அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் கூறியது.
 
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்