வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் வரும் 7ம் தேதி முதல் அழைத்து வரப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ளவர்களை கடற்படை கப்பல் மற்றும் விமானங்கள் மூலமாக அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், வெளிநாட்டில் உள்ள மக்களை கட்டண அடிப்படையில் இந்தியாவுக்கு
அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , அவர்களில் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே இங்கே வர அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டில் உள்ளா 14, 000 இந்தியர்களை 64 விமானங்கள் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இதற்கான கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
லண்டன்- டெல்லி ரூ.50,000
டாக்கா -டெல்லி ரூ, 12,000
என சிறப்பு விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்து வருவோருக்கான கட்டணங்களை அறிவித்தது மத்திய அரசு .
அப்படி வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் அழைத்து வரப்படுவோர் இங்கு 14 நாள் தனிமை கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.