புதிதாக 8,582 பேருக்கு கொரோனா - மாநில பாதிப்பு நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2022 (10:32 IST)
நேற்று 3,16,179 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,582 பேர் பாதித்துள்ளனர். 

 
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்து வந்தது. சமீபத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2-வது நாளாக இன்றும் 8 ஆயிரத்தை கடந்துள்ளது.
 
நேற்று 3,16,179 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,582 பேர் பாதித்துள்ளனர். புதிதாக 4 பேர் இறந்துள்ளனர். அதோடு கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 4,435 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் சேர்க்கப்பட்ட 3 மரணங்கள் மற்றும் நேற்று மகாராஷ்டிரத்தில் ஒருவர் என 4 பேர் இறந்துள்ளனர்.
 
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 2,922 ஆகவும், கேரளாவில் 2,471 ஆகவும், டெல்லியில் 795 ஆகவும், கர்நாடகாவில் 562 ஆகவும், அரியானாவில் 411 ஆகவும், உத்தரபிரதேசத்தில் 233 ஆகவும், தமிழ்நாட்டில் 217 ஆகவும், குஜராத்தில் 154 ஆகவும், தெலுங்கானாவில் 145 ஆகவும், மேற்கு வங்கத்தில் 139 ஆகவும் தொற்று உறுதியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்