ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் ரூ.4 கட்டணம்.. தொலைத்தொடர்புத்துறை அதிரடி அறிவிப்பு..!

Webdunia
புதன், 31 மே 2023 (16:48 IST)
ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் நான்கு ரூபாய் கட்டணம் என தொலைத்தொடர்புத்துறை அதிக அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பெரு நிறுவனங்கள் அதாவது கூகுள், அமேசான், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றன. இந்த நிலையில் இந்த குறுஞ்செய்திகளுக்கான கட்டணத்தை 25% உயர்த்தி உள்ளதாக தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் ஒவ்வொரு நோட்டிபிகேஷன் எஸ்எம்எஸ்க்கும் இனி ரூ.4 கட்டணம் செலுத்த வேண்டும் என தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் பெரு நிறுவனங்கள் பெறும் அதிர்ச்சியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் அதே நேரத்தில் சாதாரண வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டணம் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்