ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் நடிகர் அல் பசீனோ தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில், அல்பசினோவுக்கு முன்னாள் காதலியான நடிப்பு பயிற்சியாளர் ஜான் டாரண்ட் மூலம் ஜூலி மேரி( 33) என்ற மகள் உள்ளார்.
ஏற்கனவே, இவருக்கு முன்னாள் காதலியான நடிகை பெவர்லி டி ஆஞ்சலோ மூலம் ஆண்டன் ஜேம்ஸ், ஒலிவியா ரோஸ் (22) என்ற இரட்டை பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில், அல்பசீனோ, 29 வயதான நூர் அல்பல்லா என்ற பெண்ணை காதலித்து வரும் நிலையில், தற்போது நூர் அல்பல்லா 8 மாதம் கர்ப்மாக இருக்கிறார்.
எனவே, இதுவரை திருமணம் செய்துகொள்ளாத அல் பசீனோவுக்கு விரைவில் 4 வது குழந்தைக்கு தந்தையாக உள்ளார். இந்த நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.