வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கான மரியாதை வினேஷ் போகத்க்கு அளிக்கப்படும்! - ஹரியானா அரசு அறிவிப்பு!

Prasanth Karthick
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (09:13 IST)

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை வெள்ளி வென்ற வீரரை நடத்துவது போலவே நடத்துவோம் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

 

வினேஷ் போகத்
 

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மல்யுத்த போட்டியில் விளையாடி வந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதி போட்டி வரை முன்னேறியிருந்த நிலையில், 50 கிலோ எடை பிரிவில் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட கூடுதலாக உள்ளதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வினேஷ் போகத் இந்த ஒலிம்பிக்ஸுடன் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

 

எனினும் தொடர்ந்து போராடிய வினேஷ் போகத்திற்கு பலரும் ஆறுதல்களையும், வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர். இந்நிலையில் வினேஷ் போகத்திற்கு ஒலிம்பிக்ஸில் வெள்ளி வென்ற வீரருக்கு வழங்கப்படும் மரியாதை அளிக்கப்படும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது. ஒலிம்பிக்ஸ் பதக்கம் வென்ற வீரர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை, வெகுமதி, வசதிகளை அனைத்தும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்