இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, என்னை மன்னியுங்கள் அம்மா, மல்யுத்தம் என்னை வென்றுவிட்டது, நான் தோற்றுவிட்டேன். உங்கள் கனவுகளும் என் தைரியமும் உடைந்துவிட்டது. இனியும் சண்டையிட எனக்கு வலிமை இல்லை எனவும் கூறியுள்ளார்.
முன்னதாக 50 கிலோ எடை பிரிவில் வினேஷ் போகத் விளையாடி அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில், போட்டிக்கு பின்னர் அவர் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.