பிரபல பஞ்சாப் பாடகர் படுகொலை - விசாரணை ஆணையத்தை அமைத்த முதல்வர்!!

Webdunia
திங்கள், 30 மே 2022 (16:05 IST)
சித்து மூஸ்வாலாவின் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையத்தை அமைத்து பஞ்சாப் முதல்வர் உத்தரவு. 

 
பஞ்சாபில் பிரபல பாடகராகவும், காங்கிரஸ் கட்சி பிரமுகராகவும் இருந்து வந்தவர் சித்து மூஸ்வாலா. நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மன்சா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் விஜய் சிங்லாவை எதிர்த்து போட்டியிட்ட சித்து தோல்வியடைந்தார்.
 
சித்து மூஸ்வாலா உயிருக்கு ஆபத்து இருப்பதாக முன்னதாக அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த நிலையில் அந்த பாதுகாப்பை ரத்து செய்தது. இந்நிலையில் ஜீப்பில் ஜவகர் கே கிராமத்திற்கு சென்றுக் கொண்டிருந்த சித்துவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதற்கு காங்கிரஸின் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு கண்டனம் தெரிவித்து ஆம் ஆத்மி தனக்கான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் சித்து மூஸ்வாலாவின் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையத்தை அமைத்து பஞ்சாப் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சித்து மூஸ்வாலாவின் மரணம் குறித்து விசாரிக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்றம் செய்தவர்கள் விரைவில் சிறையில் அடைக்கபடுவார்கள் எனவும் உறுதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்