சத்தீஸ்கர் மாநிலத்தில் 11ஆம் வகுப்பு மாணவி சிவனுக்கு காணிக்கை செலுத்த தனது நாக்கை அறுத்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 16 வயது 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சிவபெருமான் மீது அதிக பக்தி கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் சிவபெருமானுக்கு தனது நாக்கை யாருக்கும் காணிக்கை செலுத்தினார். . இதனால் கோவில் வளாகம் முழுவதும் ரத்தமாக இருக்கும் நிலையில், அவர் தனிமையில் அமர்ந்து தியானம் செய்வது கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த கோவிலுக்குள் கிராம மக்கள் குவிந்த நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திங்கட்கிழமை காலை 7 மணி அளவில் மாணவி தனது நாக்கை அறுத்து விட்டு, தனது வீட்டிற்கு அருகிலுள்ள சிவன் கோயிலில் காணிக்கையாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விசாரிக்க வந்த காவல்துறை அதிகாரிகளை சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனுமதிக்கவில்லை என்றும், மருத்துவமனைக்கு செல்லும்படி காவல்துறையினர் கூறியும், பெற்றோர்கள் காவல்துறை அதிகாரிகளின் பேச்சைக் கேட்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு, 108 ஆம்புலன்ஸில் டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவிக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.