கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தில் இன்று அதிகாலை, கேஸ் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், டேங்கரில் இருந்து சமையல் கேஸ் எரிவாயு கசிந்ததை அடுத்து, தீயணைப்பு படையினர் வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பனிமூட்டம் காரணமாக லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மாற்று வழியில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், விபத்து நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என கோவை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தொடர்ந்து எரிவாயு கசிந்து வருவதால் அந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.