பிரதமர் மோடிக்கு சீயோல் அமைதி விருது...

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (13:25 IST)
கொரிய நாட்டில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சியோல் அமைதி விருதுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு துணை செய்ததற்காகவும் ஏழை - பணக்காரர் என்ற பொருளாதார வித்தியாசத்தை குறைத்ததற்காகவும் தேசத்தின்  மக்களை  முன்னேற்ற பாதையில்அழைத்துச்  செல்ல ஊழல் எதிர்ப்பு,சமூக ஒருமைப்பாடு போன்றவற்றை ஊக்குவித்தற்காகவும் பிரதமர் மோடிக்கு சீயோல் அமைதி விருது  வழங்கப்படுவதாக கொரிய அரசு அறிவித்துள்ளது.
 
கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் சீயோல் அமைதி விருது வழங்கப்படுகிறது.மேலும் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களையும் கொரிய கூறியுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.
 
சீயோல் அமைதி விருதினை பெரும் 14 வது நபர் மோடி என்பது இந்தியாவிற்கு கிடைத்த கௌரவமாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்