மோடியை சந்தித்த இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே

சனி, 20 அக்டோபர் 2018 (15:31 IST)
இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை இலங்கை பிரதமர் ரனில் சந்தித்து பேசினார்.
 
 
இந்நிலையில், தற்போது பிரதமர் நரேந்திர மோடியை ரனில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது இந்தியா-இலங்கை இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், முதலீடு மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற  பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்ததாக  கூறப்படுகிறது.
 
இந்த சந்திப்பு  இரு நாட்டு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்