பிரேக்குக்கு பதிலா ஆக்சிலேட்டர அமுக்கிய டிரைவர் - சிக்னலில் தாறுமாறா ஓடிய கார்

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2018 (15:55 IST)
மும்பையில் டிராஃபிக் சிக்னலில், கார் ஒன்று தாறுமாறாக ஓடி, விபத்து ஏற்படுத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மும்பையில் உள்ள தாராவியில் உள்ள ஒரு சிக்னலில் ஏராளமான வாகனங்கள் நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வேகமாக வந்த கார், சிக்னலில் நின்றுகொண்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனம் மீது தாறுமாறாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், கார் டிரைவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் டிரைவர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்தாக கூறப்படுகிறது. இதனால் தான் அந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்