ஸ்புட்னிக் தடுப்பூசியையும் நாங்களே தயாரிக்கிறோம்! – சீரம் நிறுவனம் விண்ணப்பம்!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (12:03 IST)
இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதை தயாரிக்க அனுமதி வேண்டி சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகளுக்கு அவசரகால அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து அனுப்பப்பட்டு வந்தாலும் விரைவி இந்தியாவிலேயே உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்க பல மருத்துவ நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், பரிசோதனை அனுமதி கோரி சீரம் நிறுவனமும் விண்ணப்பித்துள்ளது. சீரம் நிறுவனம் ஏற்கனவே கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்