இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் மிக வேகமாக அதிகரித்த நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது பாதிப்புகள் மெல்ல குறைந்து வருகிறது. கொரோனாவால் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், அவர்தம் குழந்தைகள் எளிதில் பாதிப்படைவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இதுகுறித்து மாநில அரசுகளுக்கு அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கொரோனா பரவல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் பாலூட்டும் தாய்மார்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என்றும், மற்ற நிறுவனங்களுக்கும் மாநில அரசுகள் இதை அறிவுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.