கொரோனாவால் இறந்தால் 5 ஆண்டுகளுக்கு சம்பளம், படிப்பு செலவு! – ரிலையன்ஸ் அறிவிப்பு!

வியாழன், 3 ஜூன் 2021 (10:54 IST)
ரிலையன்ஸ் குழும ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்தால் அவர் குடும்பத்தினருக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் பணியாளர்களுக்கு சம்பந்தபட்ட நிறுவனங்கள் தங்களால் இயன்ற பண உதவியை நிவாரணமாக வழங்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உயிரிழந்தால் அவர்கள் இறக்கும் முன் பெற்ற மாத சம்பளம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்றும், இறந்தவருக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களின் படிப்பு செலவை ரிலையன்ஸ் நிறுவனமே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்