ஜனவரி 5 வரை 144 தடை உத்தரவு - எங்கு தெரியுமா?

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (12:37 IST)
உத்திரப்பிரதேச தலைநகர் லக்னோவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்தது.  

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவது குறைந்து வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவத் தொடங்கிய மாறுபட்ட கொரோனா வைரஸான ஒமிக்ரான் பல நாடுகளுக்கு பரவத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் பல ஒமிக்ரான் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
 
இந்நிலையில் இந்தியாவில் 20-க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் பாதிப்புக்கு ஏற்ப நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனிடையே ஒமிக்ரான் கொரோனா பரவலை தடுக்க உத்திரப்பிரதேச தலைநகர் லக்னோவில் வரும் ஜனவரி 5 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மூலம் ஒமிக்ரான் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் லக்னோவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்