பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த கொடூரம்! பள்ளி முதல்வர் சஸ்பெண்ட்

Webdunia
சனி, 30 டிசம்பர் 2023 (21:30 IST)
கர்நாடகம் மாநிலத்தில் ஷிவமொக்காவில் 2 மாணவர்களை பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்த விவகாரத்தில்  பள்ளி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஷிவமொக்காவில் 2 மாணவர்கள் பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து, பள்ளி முதல்வர் சங்கரப்பாவை சஸ்பெண்ட் செய்து பொதுக்கல்வித்துறை துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் கோலார் மாவட்டத்தில் தலித் மாணவர்களை பள்ளியின் கழிவு நீர்த்தொட்டியை சுத்தம் செய்ய வைத்த முதல்வர் உட்பட  6 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்