இதையடுத்து பெற்றோர் அந்த மாணவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிகிச்சை முடிந்தபின்னர், மாணவர் பிரஜ்வல் வீடு திரும்பினார். அதன்பின்னர் 3 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு பாம்பு அவரை கடித்துள்ளது… இதற்கும் மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினர். இதற்காக அவர் நாட்டு மருத்து சிகிச்சை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, விஜயகுமார் – உஷா தம்பதியர் அந்த வீட்டை காலி செய்து, சித்தாப்பூருக்கு இடம்பெயர்ந்து ஒரு வாடகை வீட்டில் குடியேறினர். இங்கும், பிரஜ்வலை பாம்பு கடித்துள்ளது. இதற்கும் அவர் சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்த பின்னர், கடந்த 29 ஆம் தேதி 9 வது முறையாக மாணவனை பாம்பு கடித்துள்ளதால் தற்போது அவர் கிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மருத்துவர்கள் மாணவன் உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 9 முறை பாம்பு கடித்தும் மாணவர் உயிர்பிழைத்த சம்பவம் அங்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.