தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி.. மக்களவையில் பாஜக எம்பி பேச்சு..!

Mahendran
திங்கள், 10 மார்ச் 2025 (17:20 IST)
உலகின் மூத்த மொழி தமிழ்தான் என அனைத்து மொழி ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக்கொண்ட நிலையில், பாஜக எம்.பி. இன்று மக்களவையில் தமிழை விட சமஸ்கிருதம் தான் பழமையான மொழி என பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி இன்று காலை தொடங்கிய நிலையில், "தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்" என தமிழக எம்.பி.க்கள் கூறிய போது, "சூப்பர் முதல்வர் ஒருவரின் பேச்சைக் கேட்டுத்தான் தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தது" என கூறினார்.
 
இந்த நிலையில், பாஜக எம்.பி. நிஷாந்த், "தமிழை விட சமஸ்கிருதம் தான் பழமையான மொழி. திமுக அரசு எப்போதும் தமிழ் மிகவும் பழமையான மொழி என்று சொல்வார்கள், ஆனால் சமஸ்கிருதம் அதைவிட பழமையான மொழி. தென்னிந்திய மாநிலங்கள் உள்பட, நாடு முழுவதும் கோவில்களில் வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் தான் இருந்தது" என்று கூறினார்.
 
மேலும், "தேர்தலுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை திமுக எதிர்க்கிறது. திமுக என்பது காங்கிரசுடன் இணைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. நாட்டின் அடிப்படையையே தகர்ப்பதற்கு திமுக விரும்புகிறது. ஆங்கிலத்தை புகுத்த முயற்சிக்கிறார்கள். மக்களை தூண்டிவிடப் பார்க்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இதை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்றும் தெரிவித்தார்.
 
இதனால், மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்