பாஜகவில் இணைகிறார் சம்பயி சோரன்.. ஹேமந்த் சோரனுக்கு சிக்கலா?

Mahendran
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (10:05 IST)
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் பாஜகவில் இணைய இருப்பதாகவும் அவர் சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுவது, முதல்வர் ஹேம்ந்த் சோரனுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வருகிறது. 
 
நில அபகரிப்பு வழக்கில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு ஜார்கண்ட் முதல்வராக சம்பயி சோரன் பதவி ஏற்ற நிலையில் சமீபத்தில் ஹேமந்த் அவர்களுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் மீண்டும் முதல்வர் பதவி ஏற்றார்.
 
இந்த நிலையில் முதல்வர் பதவி பறிபோனதால் அதிருப்தி அடைந்த சம்பயி சோரன் பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தனி கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
 
இந்த நிலையில் தற்போது அவர் பாஜகவில் இணைய உள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சம்பயி சோரன் சந்தித்து ஆலோசனை செய்ததாகவும் அவர் பாஜகவில் இணைவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஜார்கண்ட் அரசியலில் திருப்புமுனை ஏற்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரன் அவர்களுக்கு சிக்கல் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்